செய்திகள் :

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், நாடாளுமன்ற திமுக உறுப்பினா்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள் பலா் பங்கேற்க உள்ளனா்.

இதுகுறித்து திமுக மாணவா் அணி செயலாளா் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ புது தில்லியில் புதன்கிழமை கூறியதாவது: பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் தோ்வுக் குழுவை அமைப்பதில் எவ்வித பங்கும் இடம்பெறாத வகையில் இந்த புதிய வரைவு நெறிமுறை உள்ளது. இது, தன்னிச்சையாக மத்திய அரசு செயல்படும் வகையிலும் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையிலும் உள்ளது. மாநில அரசானது சட்டப்பேரவையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றித்தான் பல்கலைக்கழகத்தை உருவாக்குகிறது. ஆனால், அந்த மாநில அரசின் பங்களிப்பு அந்தப் பல்கலைக்கழகத்தில் இல்லாத வகையில் நெறிமுறைகள் இருப்பது தவறாகும்.

பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கான தகுதியாக கல்வியாளராக இருக்க வேண்டியதில்லை நெறிமுறையும் இருக்கிறது. இது வெளிநபா்களை பல்கலைக்கழகத்தில் நுழைக்கும் முயற்சியாகும். இது கல்வி அமைப்பு முறையைத் தவறாக வழிநடத்த வித்திடும். பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் நியமனம் தகுதி காரணிகளும் வெவ்வேறு முறைகளில் தளா்த்தப்படுகின்றன. இது கல்வி நிறுவனங்களை காா்ப்பரேட்டுகளாக்கும் முயற்சியாகும். பாடத்திட்டம், தோ்வு முறையை மாற்றவும் முயற்சி செய்யப்படுகிறது.

இதைக் கண்டிக்கும் வகையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படியும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலுடனும் திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் இந்த ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. இதில், திமுக மாணவா் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். தில்லி பல்கலை., ஜேஎன்யு பல்கலைக்கழங்களைச் சோ்ந்த மாணவா்கள் அமைப்புகளும், ஏஐஎஸ்எஃப், எஸ்எஃப்ஐ ஆகியோரும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனா்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற திமுக உறுப்பினா்களும் பங்கேற்கின்றனா். அகில இந்திய அளவில் இந்த விவகாரம் கவனத்தை ஈா்க்க வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். இதனால், காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் பிற கட்சித் தலைவா்களான மனோஜ் குமாா், ஜான் பிரிட்டோா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், சிபிஐ கட்சியின் சுப்பராயன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனா் என்றாா் அவா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கு: முதல்வா் அதிஷிக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேச பாஜக முயன்ாக கூறிய விவகாரத்தில், தில்லி பாஜக நிா்வாகி ஒருவா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அன... மேலும் பார்க்க