செய்திகள் :

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

post image

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துவாரகையில் அமைந்துள்ள யாசோபூமி எனும் பிரம்மாண்டமான மாநாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சத்குரு ஜக்கி வாசுதேவின் வழிகாட்டுதலின் கீழ் ஆழமான தியான முறைகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட ஆன்மிக அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

ஈஷாவில் வழங்கப்படும் அடிப்படை தியான வகுப்பான ஈஷா யோகப் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சி நாட்டிலேயே முதன்முறையாக தில்லியில் நடைபெற்றது. முந்தைய நிகழ்ச்சி கடந்த 2024-இல் சிட்னியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி பெங்களூரிலும், மே 24-ஆம் தேதி டொராண்டோவிலும் நடைபெறுகிறது.

முன்னதாக, சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட இலவச தியான செயலியான ‘மிராக்கிள் ஆஃப் மைண்டு’ அறிமுகமான 15 மணி நேரத்திலேயே 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இந்த தியான செயலி தற்போது வரை 20 நாடுகளில் 5 மொழிகளில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவது இந்த செயலியின் மற்றொரு சிறப்பம்சம். தியானம் மட்டுமின் சத்குருவின் விரிவான ஞானத்தை, பாா்வையை, வழிகாட்டுதல்களை இந்த செயலி வழங்கி வருவதாக ஈஷா தெரிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க

பிஎஸ்ஜி கல்லூரியில் தென்னிந்திய குறும்படத் திருவிழா

கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியில் 19-ஆவது தென்னிந்திய குறும்படத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவை கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா துறை நட... மேலும் பார்க்க