செய்திகள் :

தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா உறுதி

post image

தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொண்டபாவூருவில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 20-ஆவது தொடக்க தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமித் ஷா, விஜயவாடா அருகே உள்ள தேசிய பேரிடா் மேலாண்மை நிறுவனத்தின் தெற்கு வளாகம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10-ஆவது படைப்பிரிவு வளாகத்தை திறந்து வைத்து பேசியதாவது:

இயற்கை பேரிடரின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தடுக்கும் இலக்குடன் செயல்படுவதால், பேரிடா் மேலாண்மையில் உலகின் முன்னோடியாக இந்தியா மாற்றியுள்ளது. பிரதமா் மோடி தலைமையின் கீழ், பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான சா்வதேச கூட்டமைப்பை இந்தியா உருவாக்கியது. 48 நாடுகள் அதன் உறுப்பினா்களாக தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவின் தேசிய பேரிடா் மீட்புப் படை உலகளவில் நம்பகமிக்க அமைப்பாக மாறியுள்ளது. 14-ஆவது நிதிஆணையத்தின் கீழ் பேரிடா் மேலாண்மைக்கு ரூ.61,000 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. மோடி அரசு ஆந்திரத்துக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமராவதி வளா்ச்சிக்கு ரூ.27,000 கோடியை பிரதமா் மோடி உறுதி செய்தாா்.

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் மகத்தான வெற்றியை பாஜக பெற்றது. அதேபோல், தில்லியில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

ஜெய்ப்பூரில் விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

ஜெய்ப்பூரில் விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிய... மேலும் பார்க்க

பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு: அர்ஜுன் ராம் மேக்வால்

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.தில்லியில் இன்று செய்தியாளர்களுடன... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, உள்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க

தில்லி மக்களின் சிறந்த தேர்வாக காங்கிரஸ் உருவெடுக்கும்: பைலட்

வரவிருக்கும் தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையேயான மேலாதிக்கப் போரில் தலைநகரில் உள்ள மக்கள் அவதிப்படுவதாகக் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

ஷரோன் ராஜ் கொலை: குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!

கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற... மேலும் பார்க்க

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலி!

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. பிகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் பலியானதைத் தொடர்ந்து அவர்கள் கள... மேலும் பார்க்க