செய்திகள் :

தில்லியில் மோசமான வானிலை: 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

post image

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றால் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இரண்டு விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒன்று அகமதாபாத்திற்கும் திருப்பி விடப்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

விமான கண்காணிப்பு வலைத்தள தரவுகளின்படி, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சர்வதேச விமான நிலையம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 5 மணிக்கு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமான நடவடிக்கைகளில் சில பாதிப்புகள் இருந்தததாகவும், தற்போது விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன என தெரிவித்துள்ளது.

தில்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

வட இந்தியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தில்லிக்கு வரும் மற்றும் புறப்படும் சில விமானங்கள் சேவைகள் தாமதமாகியுள்ளன அல்லது திருப்பி விடப்படுகின்றன, இதனால் ஒட்டுமொத்த விமான சேவைகளுக்கான அட்டவணை பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள ஏர் இந்தியா, இடையூறுகளைக் குறைக்க எங்கள் தரப்பில் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.

மேலும், பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக, விமான சேவைகளின் விவரங்களை அறிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும், இது நாள்தோறும் சுமார் 1,300 விமான இயக்கங்களைக் கையாண்டு வருகிறது.

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24),குமரேசன் (36), கன்னியப்பன் (70),பாலகிருஷ்ணன் (52), சேகர் (44),ஜன... மேலும் பார்க்க

பாகிஸ்தான் 9-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தொடா்ந்து 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூ... மேலும் பார்க்க

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 14 பேர் காயம்

நாகப்பட்டினம்: தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை. செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச்... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 3,619 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின... மேலும் பார்க்க

தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது.ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்க... மேலும் பார்க்க

சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக... மேலும் பார்க்க