செய்திகள் :

தில்லியில் 4-வது நாளாக 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

தில்லி காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்புப் படைகள், மோப்ப நாய் பிரிவுகள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தில்லியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களை வெளியேற்றி சோதனை நடத்தப்படுகிறது. ஆனால், சோதனைக்கு பின்னர் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவருகின்றது.

இதுகுறித்து முன்னாள் தில்லி முதல்வர் அதிஷி கூறியதாவது, “20 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். நான்கு என்ஜின் பாஜக அரசால் மாணவர்களைகூட பாதுகாக்க முடியவில்லை” என விமர்சித்துள்ளார்.

இதனிடையே, மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை சைபர் போலீஸ் உதவியுடன் தில்லி போலீசார் தேடி வருகின்றனர்.

Bomb threats have been made to 20 schools in Delhi for the fourth consecutive day today.

இதையும் படிக்க : பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கத் திட்டம்!

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.அரசு வேலைகள்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இரண்டு கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நில... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

கேரளத்தின் முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோனியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூலை 18) நேரில் சந்தித்துள்ளார்.கோட்டயம் மாவட்டத்தில், முன்னாள்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் கைது !

மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் 2022 வரையிலான ஆட்சிக்காலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலா... மேலும் பார்க்க

அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலுக்குப் பின், இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி, காங்கிரஸ் க... மேலும் பார்க்க