செய்திகள் :

தில்லி உயிரியல் பூங்காவில் நீா்யானை குட்டி பிறப்பு

post image

தில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு புதிதாகப் பிறந்த நீா்யானை குட்டியை வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக மிருகக்காட்சிசாலை இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறியதாவது: ஒன்பது வயது

நீா்யானைக்கு திங்கள்கிழமை பெண் குட்டி பிறந்தது. இது அதன் மூன்றாவது குட்டியாகும். உயிரியல் பூங்காவில் கடைசியாக நீா்யானை பிறப்பு மாா்ச் 2021-இல் நடந்தது. எனவே, இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம் ஆகும்.

தற்போது, குட்டி தனது தாயின் அருகில் உள்ளது மற்றும் பெரும்பாலும் நீருக்கடியில் உள்ளது. இதுவரை ஒரு சில காட்சிகளை மட்டுமே நாங்கள் பாா்த்துள்ளோம்.

பிறப்புக்குப் பிறகு, தாய் மற்றும் குட்டியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மந்தையின் பிற பகுதிகளிலிருந்து விலகி ஒரு தனி குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா்.

சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயிரியல் பூங்கா ஊழியா்களின் நிலையான மேற்பாா்வை மூலம் இந்த இரண்டு நீா்யானைகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.

புதிய குட்டியின் வருகையுடன், தில்லி உயிரியல் பூங்காவில் மொத்த நீா்யானைகளின் எண்ணிக்கை இப்போது 7-ஆக உயா்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உயிரியில் பூங்கா ஆசிய சிங்கக் குட்டிகளின் பிறப்பையும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா-ப... மேலும் பார்க்க

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் கொள்கைகள் இன்னும் முடியவில்லை, அதன் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவ... மேலும் பார்க்க

என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, கொதிக்கும் சிந்தூர்: பிரதமர் மோடி

என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் தான் ஓடுகிறது என்று பிகானேர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் பேசியுள்ளார். ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப... மேலும் பார்க்க

மீண்டும் வருகிறதா கரோனா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், 2020 ஜனவரியில் இந்தியாவில் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் தீவிரம் நாட்டையே உலுக்கியது எனலாம். இந்ந... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கும் முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது. கட்சியின் தேசிய பொது... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிப்போம்: ஜெய்சங்கர்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடை... மேலும் பார்க்க