கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை விரையில் தொடங்கவுள்ளனர். அணி நிர்வாகங்கள் தங்களது அணிகளுக்கான பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க: இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்
உதவிப் பயிற்சியாளர் நியமனம்
விரையில் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மேத்யூ மோட் இன்று (பிப்ரவரி 25) நியமிக்கப்பட்டுள்ளார்.
A serial winner who's back for more
— Delhi Capitals (@DelhiCapitals) February 25, 2025
Welcome to Dilli, Matthew Mott ❤️ pic.twitter.com/gKR8sAXMRg
51 வயதாகும் மேத்யூ மோட் தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி, தில்லி அணியின் இயக்குநர் வேணுகோபால் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் முனாஃப் படேலுடன் இணைந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு பயிற்சியளிக்க உள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக மேத்யூ மோட் செயல்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்: வெங்கடேஷ் ஐயர்
ஐபிஎல் தொடரில் முதல் கோப்பைக்கான தேடலில் உள்ள தில்லி கேபிடல்ஸ் அணி, இந்த சீசனுக்காக அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டர்.
அதேபோல, பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஹோப்புக்குப் பதிலாக முன்னாள் இந்திய வீரர் முனாஃப் படேல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, மேத்யூ மோட் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வருகிற மார்ச் 24 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.