திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு
தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டது.
தொடர்ந்து, தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த அரசின் செயல்திறன் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?
இதனிடையே, பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு விஜேந்தர் குப்தா போட்டியிடுவார் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜேந்தர் குப்தா செய்தியாளர்களுடன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
”தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வருகின்ற பிப். 24, 25 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் தற்காலிக பேரவைத் தலைவரால் முதல் நாளில் 70 உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.
தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்பிறகு முதல் பணியாக 14 சிஏஜி அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். அதுகுறித்து உறுப்பினர்கள் விவாதம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.