செய்திகள் :

தில்லி தேர்தல்: வாக்காளர்கள் நன்கொடை அளிக்கும் பிரசாரம் தொடக்கம்

post image

புது தில்லி : தில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம்m உள்பட செலவுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப்படுவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி பேசியுள்ளார்.

தில்லி யூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே கடும் நிலவுகிறது.

தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதிஷி பேசியிருப்பதாவது, “இத்தேர்தலில் போட்டியிட எனக்கு ரூ. 40 லட்சம் வரை தேவை. இதற்காக தில்லி மக்களிடமும் நாட்டு மக்களிடமும் ஆதரவு கோருகிறேன். உங்கள் ஆதரவுடன் தேர்தலில் கல்காஜி பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்று பேசியுள்ள அவர், மக்களிடம் தேர்தல் நன்கொடை aளித்து உதவுமாறு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “கடந்த 5 ஆண்டுகளில், ஒரு எம்.எல்.ஏ.வாக, ஓர் அமைச்சராக, இப்போது, தில்லி முதல்வராக நான் இருப்பதற்கு.. நீங்கள் எனக்கு ஆதரவு தந்தீர்கள். உங்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் இல்லாமல் இவையனைத்தும் சாத்தியமாகியிருக்காது.

கல்வியறிவு பெற்ற ஒரு இளம் பெண்ணாக நான் அரசியலில் தடம்பதிக்க, நீங்கள் அளித்த நம்பிக்கையும் நன்கொடையும் உதவியது. நீங்கள் இல்லாமல் நான் தனியொரு ஆளாக இந்த பாதையில் செல்ல முடியாது.

இப்போது, இன்னொரு தேர்தல் பிரசாரத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் உங்களின் பேராதரவு மீண்டும் தேவைப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் உங்களின் பங்களிப்பாக நன்கொடை அளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் (அதற்கான இணையதள முகவரியையும் அவர் பகிர்ந்துள்ளார்).

நாம் ஒன்றிணைந்து முன்னேற்றத்துக்கான இந்த பாதையில் நம்பிகையுடன் தொடருவோம்” என்று கூறியுள்ளார்.

தேசிய இளைஞர் நாள்: வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ரூ.8,500 ஊக்கத்தொகை! -காங். வாக்குறுதி

புது தில்லி : தில்லி தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தால், வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித... மேலும் பார்க்க

வளர்ந்த இந்தியா: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக கடமையை இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணம் சாத்தியமற்றது என்று சிலர் கருதுவதாகவும், ஆனால... மேலும் பார்க்க

மணிப்பூரில் 2 மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்பு

மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.உலக வல்லரசின் 47-ஆவது அதிபராகவும், அந்நாட்டின் தலைமைப் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டி... மேலும் பார்க்க

பாஜக ஆட்சி வந்தால் குடிசைப்பகுதிகளை அழித்து விடுவர்: கேஜரிவால்

தில்லியில் பாஜக ஆட்சி வந்தால், குடிசைப்பகுதி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி விடுவர் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.தில்லியில் ஷாகுர் பஸ்தி பகுதியில் செய்தியா... மேலும் பார்க்க

வேலை செய்யும் நேரத்தைவிட பணியின் தரமே முக்கியம்! -ஆனந்த் மஹிந்திரா

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பணியாளர் நலன் சார்ந்த கருத்துகளை சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.கடந்த சில நாள்களுக்கு முன், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என். ஆர்.... மேலும் பார்க்க