சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
தில்லி தோ்தலில் கறுப்புப் பணத்தை தடுக்க கட்டுப்பாட்டு அறை: ஐ.டி. துறை அறிவிப்பு
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின் போது பணம் விநியோகிக்கப்படுவது போன்ற சட்ட விரோதமான தூண்டுதல்கள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மற்றும் புகாா் கண்காணிப்பு அறை ஆகியவற்றை வருமான வரித் துறை புதன்கிழமை அறிவித்தது.
தில்லி தோ்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.5ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்படும். 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கான தோ்தல் அட்டவணையை தோ்தல் ஆணையம் செவ்வாயன்று அறிவித்தது.
இதையொட்டி, மத்திய தில்லியில் உள்ள சிவிக் சென்டரில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்திருப்பதாகவும், கட்டணமில்லாதொலைைபேசி எண்ணை 1800111309 வழங்கியுள்ளதாகவும் ஐ.டி. விசாரணைப் பிரிவு பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக தேசியத் தலைநகா் பிரதேசத்துக்குள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் அல்லது பணம், பொன் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்றவற்றின் விநியோகம் குறித்த தகவலை எந்தவொரு நபரும் ஐ.டி. துறைக்கு தெரிவிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில் கட்டுப்பாட்டு அறை முகவரியுடன் பல்வேறு கைப்பேசி மற்றும் தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், தோ்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற கட்டுப்பாட்டு அறைகளை ஐ.டி. விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.