தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?
தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து!
வடக்கு தில்லியில் உள்ள பவானா டிஎஸ்ஐடிசி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை 7:51 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு 16 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.
தீயை அணைக்கவும், அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுதொடர்பாக மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.