பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
தில்லி பல்கலை.யில் கூடுதல் சுற்று: மாணவர் சேர்க்கை தொடக்கம்
தில்லி பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்புகளுக்கான நேரடி கூடுதல் சுற்று (மாப்-அப்) மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.
முதல் நாளில் 73 பிஏ ஹானர்ஸ் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) மற்றும் முன்பதிவு செய்யப்படாத (யுஆர்) மாணவர்கள் தவிர அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கும் செவ்வாய்க்கிழமை சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியது:1 ,700 இடங்களுக்கு சுமார் 876 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், 73 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
பல சுற்று சேர்க்கை இருந்தபோதிலும், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான சுமார் 2,000 இடங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் சுமார் 7,000 இடங்கள் காலியாக உள்ளன.
பிஏ ஹானர்ஸ் படிப்புகளுக்காக, புதன்கிழமை சுமார் 2,600 யுஆர் மற்றும் ஓசிபி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பி.காம் மற்றும் பொருளாதாரப் படிப்புகளுக்கான சேர்க்கை வியாழக்கிழமை நடைபெறும். அறிவியல் பாடங்களுக்கான சேர்க்கை மறுநாள் நடைபெறும். மாப்-அப் சுற்று செப்டம்பர் 29 ஆம் தேதி முடிவடையும்.வழக்கமான சேர்க்கைகளைப் போல் இன்றி, மாப்-அப் சுற்று க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டது அல்லாமல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
செப்டம்பர் 29 ஆம் தேதிக்குப் பிறகு காலியாக உள்ள இடங்கள் இந்த அமர்வில் நிரப்பப்படாமல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.