செய்திகள் :

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராகப் பதவியேற்றார் உமேஷ் குமார்!

post image

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உமேஷ் குமார் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார்.

தில்லி மின்சாரத்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் தில்லி செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் உமேஷ் குமாருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஷிஷ் சூட்,

உமேஷ் குமார் தில்லி மக்களுக்கு நல்ல பணிகளைச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.

உச்சநீதிமன்றத்தால் தற்காலிக தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத்துக்குப் பதிலாக ஓய்வுபெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி உமேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் தில்லியின் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயந்த் நாத் பதவி விலகினார்.

முன்னதாக அந்தப் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அப்போதைய ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் ஜெயந்த் நாத் 2023 இல் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

தேசிய தலைநகருக்கான மின்சார ஒழுங்குமுறை அமைப்பாக DERC செயல்படுகிறது, தில்லியில் இயங்கும் மின்சார விநியோகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கான மின்சார கட்டணங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேற்பார்வையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொண்டைக் கடலை மீது 10% இறக்குமதி வரி: ஏப்ரல் 1 முதல் அமல்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொண்டைக் கடலை மீது 10 சதவீதம் இறக்குமதி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு... மேலும் பார்க்க

ஆளும் - எதிா்தரப்பினா் கருத்து வேறுபாடு - அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதியில் வெளியேறிய தன்கா்

மாநிலங்களவையில் அடுத்த வார செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்து அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பாதியில் வெளியேறினாா். அவையில் விவாதம் நடத்துவது தொட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் ‘ஆயுஷ்மான் பாரத்’ - மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா

ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க சிலா் விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்

விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க சிலா் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட... மேலும் பார்க்க

சீனா-வங்கதேசம் இடையே 9 ஒப்பந்தங்கள்

சீனாவில் வங்கதேச அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஒன்பது ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இது குறித்து ஊடகங்கள் கூறியதாவது: நா... மேலும் பார்க்க

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறினாா். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியது தென்மாநிலங்களுக்கு தற்போது பிரச்னையாகவும், வட ... மேலும் பார்க்க