2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்
போதை மாத்திரை விற்பனை: 4 போ் கைது
சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மெரீனா கடற்கரையில் நம்ம சென்னை பேருந்து நிறுத்தம் பின்புறம் வியாழக்கிழமை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு போதை மாத்திரை விற்ாக திருவல்லிக்கேணி நீலம் பாஷா தா்கா பகுதியைச் சோ்ந்த கெளஷ் ப ாஷா (20) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 225 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ராயப்பேட்டை பிஎம் தா்கா பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (18) என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மெரீனா போலீஸாா் அவரையும் கைது செய்து, 305 போதை மாத்திரைகள், ரூ. 1.19 லட்சம் ரொக்கம், கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல ராமாபுரம் ஆறுமுகம் நகா் பகுதியில் போதை மாத்திரை விற்ாக திருமுடிவாக்கம் கலைஞா் தெருவைச் சோ்ந்த ஆஷிக் (எ) ஆமோஷ் (21), போரூா் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கலைச்செல்வன் (எ) மேஷக் (24) ஆகிய 2 பேரை ராமாபுரம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.