செய்திகள் :

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

post image

நமது சிறப்பு நிருபர்

தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து இரண்டு நாளாக ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தில்லி பொதுப் பணித் துறை முடுக்கிவிட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப். 23}ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்குள்ளாக புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த தில்லி பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, புதிய அரசு பதவியேற்கும்வரை பொறுப்பு முதல்வராக தொடரும்படி ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருந்த அதிஷியை தில்லி துணைநிலை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக ஐந்து நாள்களுக்கு சென்றார். இதனால், கடந்த வாரமே எதிர்பார்க்கப்பட்ட பதவியேற்பு விழா தாமதமானதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பிரதமர் தில்லியில் இல்லாத நேரத்தில் முதல்வர் தேர்வு தொடர்பாக கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து பேசி தீர்மானிக்கும்படி பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டாவால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனிடையே பிரதமரும் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பினார்.

இந்நிலையில், கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் நடந்த கூட்டங்களில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக யாரைத் தேர்வு செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது. புது தில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பர்வேஷ் சாஹிப் சிங்கின் பெயர் முதல்வர் பதவிக்கு பிரதானமாக அடிபட்டாலும், அதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த விஷயத்தில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவும் பாஜக மேலிடமும்தான் தீர்மானிக்க வேண்டும் என பர்வேஷ் சாஹிப் சிங் தெளிவுபடுத்தினார்.

பாஜகவைப் பொருத்தவரை தேர்தலில் ஆட்சியமைக்க அக்கட்சி தகுதிபெறும்போது முதலில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்படுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, பாஜக சட்டப்பேரவைக் குழு கூடி அதில் தங்களின் தலைவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்வர். இந்தத் தேர்வு கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி நடக்கும். இதன் பிறகு சட்டப்பேரவைக் குழு தலைவரை ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுப்பார் அல்லது ஆட்சியமைக்க சட்டப்பேரவைக் குழுத் தலைவர் துணைநிலை ஆளுநரிடம் நேரில் சென்று உரிமை கோருவார்.

தில்லி தேர்தலைப் பொருத்தவரை பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. அதனால், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தீர்மானிக்கப்பட்டவுடன் துணைநிலை ஆளுநரிடம் இருந்து முறைப்படி அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் முதல்வர்?: தேர்தலில் பாஜக வென்றது முதல் பல பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகின்றன. அதில் பர்வேஷ் வர்மா (புது தில்லி), ரேகா குப்தா (ஷாலிமார் பாக்), விஜேந்தர் குப்தா (ரோஹிணி), சதீஷ் உபாத்யாய (மாளவியா நகர்), ஆசிஷ் சூட் (ஜனக்புரி), பவன் சர்மா (உத்தம் நகர்), அஜய் மஹாவர் (கோண்டா) ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

இந்தப் பெயர்கள் தொடர்பாக திங்கள்கிழமை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டதாக பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், முதல்வர் தேர்வு தொடர்பாக பாஜக மேலிட தலைவர்களிடம் விசாரித்தபோது யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை செவ்வாய்க்கிழமை இரவு வரை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையே, தில்லி பொதுப் பணித் துறை சார்பில் ராம்லீலா மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக தில்லி பாஜக தலைவர் வீரேந்தர் சச்தேவா, கட்சியின் தேசிய பொதுச் செயலர் தருண் சுக், பொதுச் செயலர் வினோத் தாவ்டே ஆகியோர் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.

தில்லி நகர போக்குவரத்து காவல் துறை சார்பிலும் பிப். 20-ஆம் தேதி நண்பகலுக்குப் பிறகு ராம்லீலா நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அதைச் சுற்றியுள்ள சிறுகடைகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் பிற்பகலுக்குப் பிறகு கடைகளைத் திறக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி... மேலும் பார்க்க

பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!

பெங்களூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.தில்லியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒரு கல்லூரி சந... மேலும் பார்க்க

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க