தி காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சையைத் தொடர்ந்து தி தில்லி ஃபைல்ஸ்!
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ’தி தில்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தினையும் தயாரித்துள்ளது.
காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து எடுக்கப்பட்ட தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி மிகுந்த சர்ச்சைய ஏற்படுத்தியது.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம் சர்ச்சை மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு ரூ.340 கோடி வசூலித்தது.
அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி நடித்திருந்தனர்.
இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியாகி 3ஆண்டு ஆனதையொட்டி தி தில்லி ஃபைல்ஸ் குறித்து அப்டேட் கூறியுள்ளார்கள்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. தற்போது புதிய உண்மையுடன் திரைக்கு வரவிருக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஆக.25ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தையும் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
