ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!
தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார்.
உஸ்மான் சாலை - சிஐடி நகரை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தில் நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இதன் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் 1.2 கி.மீ. நீளத்தில் 53 தூண்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி. ஆ. ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?