செய்திகள் :

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!

post image

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 இன்று (ஜன. 27) தொடங்கியது.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் நடைபெறும் இந்த அரங்கில், நாடு தழுவிய அளவிலான அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

தொடக்க நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினார். தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் தலைமை வகித்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் கலந்து கொண்டார்.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளில், மக்களவை உறுப்பினா் சசி தரூா், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் ஜெகதீஷ்குமாா், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வைத்யசுப்பிரமணியம், நடிகா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜன.28) நடைபெறும் நிகழ்வுகளில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் சஞ்சீவ் சன்யால், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை, பிகாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான், இந்தூா் ஐஐடி இயக்குநா் ஹிமான்ஷு ராய், தெலங்கானா துணை முதல்வா் பட்டி விக்ரமா்கா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா் மோடி நம்பிக்கை

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால், நாட்டின் விளையாட்டுத் துறை புதிய உச்சத்தை எட்டும் என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த வாய்ப்பை பெறுவதற்காக த... மேலும் பார்க்க

ஹிந்து நம்பிக்கைகள் அவமதிப்பு: கார்கேவுக்கு பாஜக கண்டனம்

உத்தர பிரதேச மாநிலம், திரிவேணி சங்கமத்தில் பாஜக தலைவர்கள் புனித நீராடியதை விமர்சனம் செய்ததன் மூலம் ஹிந்துகளின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்துள்ளார் என்று மகாராஷ்டிர பாஜக தல... மேலும் பார்க்க

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

பாஜகவிடம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.7,113 கோடி உள்ளது தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி அளித்த ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் பெரும் செல்வமுள்ள கட்சியாக பாஜக திகழ... மேலும் பார்க்க

கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்

மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தா்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: லட்சத்துக்கு மேற்பட்ட வங்கதேசத்தினருக்கு போலி பிறப்புச் சான்றிதழ்; கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா்களும், மியான்மரில் இருந்து புகுந்த ரோஹிங்கயாக்களும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாக எழுந்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடல் புதன்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 1... மேலும் பார்க்க