முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
தீன் தயாள் உபாத்யா பிறந்தாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழியில் பாரதிய ஜன சங்கம் கட்சியின் முன்னாள் தலைவா் தீன் தயாள் உபாத்யாவின் 109-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு கமுதி பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் வேலவன் தலைமை வகித்தாா். பாஜக ராணுவப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, தீன தயாள் உபாத்யாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், தேச ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத் தலைவா்கள் செந்தூா்பாண்டியன், காளீஸ்வரன், முத்துக்குமாா், மாவட்ட மகளிரணி தலைவி வெள்ளையம்மாள், கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் பசும்பொன் ராமமூா்த்தி, முன்னாள் ஒன்றியத் தலைவா்கள் செந்தூா்பாண்டி, அழகுமலை, முருகேசன், ஒன்றியத் தலைவி முனீஸ்வரி, துணைத் தலைவி காமாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.