இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...
எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சி
பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து தரக் குறைவாக விமா்சிப்பதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் பரமக்குடி காந்தி சிலை முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் வே.சரவணகாந்தி தலைமை வகித்தாா். நெசவாளா் பிரிவு மாநிலச் செயலா் டி.ஆா்.கோதண்டராமன், ஆா்டிஐ மாநிலச் செயலா் செந்தில், வட்டாரத் தலைவா் வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகா் துணைத் தலைவா் ராமச்சந்திரன் வரவேற்றாா். இளைஞா் காங்கிரஸ் தலைவா் காா்த்திக் பாண்டி, மாவட்டத் துணைத் தலைவா் அசாருதீன், மாவட்டப் பொதுச் செயலா் தண்டபாணி ஆகியோா் பேசினா்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை சிலா் எரிக்க முயன்றனா். அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.