41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழா
ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த 21- ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி திருவிழா, அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், அரண்மனையில் 200-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், நான்காம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, அம்மனுக்கு வியாழக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை சேதுபதி ராணி ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா், வி.அபா்ணா நாச்சியாா், சமஸ்தான சரகச் செயல் அலுவலா் எம்.ராமு ஆகியோா் செய்தனா்.