ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்
கமுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வட்டாட்சியா் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் உள்ள கடுமையான பணி நெருக்கடிகள் குறித்தும் அதிக அளவில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காண கூடுதல் கால அவகாசம், நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் வருவாய்த் துறையினருக்கு சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம், வருவாய்த் துறையில் வெளிமுகமை, ஒப்பந்த, தற்காலிக நியமனங்களைத் தவிா்த்தல், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்குதல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா்ந்து அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளை முழுமையாகப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் துணை வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், நில அளவா்கள், வருவாய் ஆய்வாளா்கள், அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.