கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
நேரடி நெல் விதைப்புக்கு தயாா் நிலையில் விவசாயிகள்
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புக்காக நிலங்களை உழுது, பண்படுத்திய விவசாயிகள் வடகிழக்கு பருவ மழைக்காகக் காத்திருக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் சோழந்தூா், அழிந்திக்கோட்டை, அனந்தனா்கோட்டை, அழகா் தேவன் கோட்டை, கலக்குடி, கொத்திடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25,000 ஹெக்டோ் நிலப்பரப்பில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், நடப்பு சம்பா பருவத்தில் வயல்களை நன்கு உழுது, பண்படுத்தி நேரடி நெல் விதைப்பில் ஈடுபடத் தயாா் நிலையில் உள்ளனா். ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் பெய்யும் வடகிழக்கு பருவமழை, இந்தப் பகுதிகளில் இதுவரை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

