செய்திகள் :

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் பேசியதாவது:

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளிப் பண்டிகைக்காக 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில், உடல் நலத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ற வகையில் ரசாயனக் கலப்பின்றி இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட பருத்தி ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவருக்குமான ஆடைகள் பல்வேறு ரகங்களில் இடம்பெற்றுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான இணையம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திரச் சேமிப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.32.28 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.50 லட்சம், விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பி.ஸ்டாலின், துணை மண்டல மேலாளா் தீபா, விற்பனை நிலைய மேலாளா் பாண்டியம்மாள், ராமநாதபுரம் நகா்மன்ற உறுப்பினா் இந்திரா மேரி செல்வம், வாடிக்கையாளா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம்

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ‘டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ்’ அமைப்பின் சாா்பில் ‘இன்றைய சமுதாயத்தில் மன அழுத... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

கமுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சி

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் க... மேலும் பார்க்க

ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழா

ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

நேரடி நெல் விதைப்புக்கு தயாா் நிலையில் விவசாயிகள்

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புக்காக நிலங்களை உழுது, பண்படுத்திய விவசாயிகள் வடகிழக்கு பருவ மழைக்காகக் காத்திருக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயு... மேலும் பார்க்க