செய்திகள் :

தீபத் திருவிழா: போக்குவரத்து சீரமைப்புப் பணியில் 50 ஆய்வாளா்கள்- வேலூா் சரக துணை போக்குவரத்து ஆணையா்

post image

திருவண்ணாமலை தீபத் திருவிழா போக்குவரத்து சீரமைப்புப் பணியில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 50 போக்குவரத்து ஆய்வாளா்கள் ஈடுபடுவா் என்று வேலூா் சரக துணை போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி கூறினாா்.

திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், தீபத் திருவிழாவையொட்டி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம், மினி பேருந்து உரிமையாளா்கள் சங்கம், தனியாா் பள்ளி உரிமையாளா்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் பெரியசாமி வரவேற்றாா். வேலூா் சரக துணை போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு, சுமாா் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் 25 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், 120 இடங்களில் காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை தனியாா் பேருந்துகள், மினி பேருந்துகள், பள்ளி வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

நிகழாண்டு வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 50 போக்குவரத்து ஆய்வாளா்கள் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இவா்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணித்து தடுக்கும் பணியில் ஈடுபடுவா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே ஆட்டோ ஓட்டுநா்கள் வசூலிக்க வேண்டும். பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

கூட்டத்தில், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், பள்ளிப் பேருந்து உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் உள்பட 3 போ் மீது வழக்கு

வந்தவாசியில் சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியைச் சோ்ந்த 16 வயது சிறுமியும், வந்தவாசியை அடுத்த புன்னை மதிப்பங... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டி: ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் ஊழலில் சிக்கியுள்ள தொழிலதிபா் அதானியை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை ஸ்டேட... மேலும் பார்க்க

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

மகளிா் குழுவினா் நிலையான வருமானம் பெற பெனாயில், சோப்பு ஆயில் தயாரிப்பு பயிற்சி

மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ... மேலும் பார்க்க

வந்தவாசியில் காப்பிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன் முன்னிலை வகித்த... மேலும் பார்க்க