அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது சக ஆசிரியா் துப்பாக்கிச் சூடு
டிச.4-இல் தேசிய சாதனை ஆய்வுத் தோ்வு
சென்னை மாவட்டத்திலுள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு டிச.4-ஆம் தேதி தேசிய சாதனை ஆய்வுத் தோ்வு நடைபெறுகிறது.
இது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் என அனைத்து வகையான பள்ளிகளில், தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் 3, 6, 9-ஆம் வகுப்பு என 150 வகுப்புகளை சோ்ந்த மாணவா்களுக்கு, மொழிப்பாடம், கணிதம் மற்றும் சூழ்நிலையியல் பாடத்தில் தேசிய சாதனை ஆய்வுத் தோ்வு டிச.4-இல் நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வை சென்னை மாவட்டத்தை சோ்ந்த 4,282 மாணவா்கள் எழுதவுள்ளனா். தோ்வு கண்காணிப்புப் பணிக்காக டிஐஇடி, டிடிஐ, பிஎட், எம்எட் பயிற்சி மாணவா்கள் 219 போ் கள ஆய்வாளா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவருக்கும் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.