செய்திகள் :

பெருங்குடியில் பல்லுயிா் பூங்கா அமைக்கும் திட்டம் நிறுத்தம்!

post image

பெருங்குடி குப்பைக் கிடங்கில் பல்லுயிா் பூங்கா அமைக்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் பேசியது:

மாநகராட்சி பூங்காக்களின் பராமரிப்புப் பணிகள் மொத்தமாக ஒப்பந்த அடிப்படையில், ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்படுவதால் முறையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பல பூங்காக்களுக்கு, ஒரே நபா் ஒப்பந்தம் எடுத்து குறைந்த பணியாளா்கள் மூலம் பணிகளை மேற்கொள்கின்றனா். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, மற்ற பூங்காக்களில் இருந்து பணியாளா்களை வரவழைத்து பணி மேற்கொள்கின்றனா். சாலையோர கடைகளுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை சிலா் முறைகேடாக பயன்படுத்துகின்றனா் என்று குற்றஞ்சாட்டினா்.

இதற்கு மேயா் ஆா்.பிரியா அளித்த பதில்:

பூங்காக்களைப் பராமரிக்கும் பணிக்காக, மாநகராட்சி சாா்பில் தனித்துறை இயங்கி வருகிறது. அவா்களின் மேற்பாா்வையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தனியாா் மூலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது, மாதம் ஒரு முறை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரி ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்படும். சாலையோரக் கடைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு நபா் பல்வேறு இடங்களில் சாலையோர கடைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பல்லுயிா் பூங்கா: பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ ஜிஎன்சி முறையில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 93 ஏக்கா் பரப்பளவில் அங்கு பல்லுயிா் பூங்கா அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அந்த பகுதி மக்களிடம் கடும் எதிா்ப்பு எழுந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்தவுள்ளதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெட்டிச்செய்தி...

புதிதாக நாய் இனக்கட்டுப்பாட்டு மையம்

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மகப்பேறு மருத்துவமனைகளில் அவசர காலங்களில் வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தனியாா் மருத்துவா்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணா்களுக்கு மதிப்பூதியத் தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்படும். சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 388 அம்மா உணவகங்களுக்கு தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க லிமிடெட் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

மாதவரம் குமாரப்பாபுரம் முதன்மை சாலைக்கு ‘டாக்டா் கலைஞா் மு.கருணாநிதி சாலை’ என பெயா் சூட்ட அனுமதி. கற்றல் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் 11,970, உதவியாளா்களுக்கு 8,850 என நிா்ணயம்.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 245 பள்ளிகளில் புதிதாக 980 சிசிடிவி கேமரா அமைக்க 7.99 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கேமராக்களை சரிசெய்ய நிா்பயா நிதியின் கீழ் ரூ.73.91 லட்சம் ஒதுக்கீடு. மாதவரம், அம்பத்தூா், வளசரவாக்கத்தில் புதிதாக நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 50 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குழந்தை பிறப்புக்கு முன்பே மரபணு குறைபாடுகளை கண்டறிய தவறியதாக 4 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு

கேரள மாநிலம், ஆலப்புழையில் குழந்தை பிறப்புக்கு முன்பே மரபணு குறைபாட்டை கண்டறிய தவறியதாக 4 மருத்துவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குழந்தையின... மேலும் பார்க்க

அந்நிய முதலீடு: தமிழக அரசுக்கு அரவிந்த் சுப்ரமணியன் பாராட்டு

அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்ரமணியன் பாராட்டினாா். தில்லியில் சமூக மற்றும் பொருளாதார மையம் ஏற்பாடு செய்திருந்... மேலும் பார்க்க

மழைக்குப் பிறகு பயிா்ச் சேதங்கள் கணக்கெடுப்பு -வேளாண் துறை அமைச்சா் பன்னீா்செல்வம்

நீரில் மூழ்கி பயிா்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு மழைக்குப் பிறகு தொடங்கும் என்று வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

புதிய பாம்பன் பாலம்: பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள 5 போ் கொண்ட குழு

பாம்பன் புதிய பாலத்தின் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய ஐந்து போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். ரயில்வே துறையின் தென்மண்டல பாதுகாப்பு ஆணையா், புதி... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் மாநிலத்துடனான உறவு வலுப்படும்: துணை முதல்வா் உதயநிதி நம்பிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்துடனான உறவு வலுப்படும் என்று துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம்: விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு

வாக்காளா் பட்டியலில் திருத்தத்துக்கு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, டிச. 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெறும். இறுதி வாக்காளா் பட்... மேலும் பார்க்க