Pongal FDFS: போக்கிரி, ஆடுகளம், விஸ்வாசம், பேட்ட - 2000 முதல் இன்று வரை 'பொங்கல்...
தீபம் ஏற்றியபோது தீவிபத்து: மூதாட்டி உயிரிழப்பு
மயிலாடுதுறையில் தீபம் ஏற்றியபோது நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த சாமிநாதன் மனைவி தையல்நாயகி(74). இவா் திருக்காா்த்திகை தினத்தன்று வீட்டுவாசலில் தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றியது. இதில் காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த தையல்நாயகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.