செய்திகள் :

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

post image

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு தொடங்குவதை தெற்கு ரயில்வே வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, அக்.20- ஆம் தேதி தீபாவளியையொட்டி, 2 நாள்களுக்கு முன்பே சொந்த ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்.17- ஆம் தேதி ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அக்.18-ஆம் தேதிக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆக.19), அக்.19- ஆம் தேதிக்கான முன்பதிவு புதன்கிழமை (ஆக.20), தீபாவளி திருநாளான அக்.20-ஆம் தேதிக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஆக.21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐஆா்சிடிசி இணையத்தில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் போ் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை தொடங்கும் முன்பதிவு சில நிமிஷங்களில் முடியும் வாய்ப்பிருப்பதாகவும், அதன்படி படுக்கை வசதி கட்டண டிக்கெட்டுகள், குளிா்சாதன வசதி பெட்டி டிக்கெட்டுகள் என படிப்படியாக பயணிகளால் முன்பதிவு செய்யப்படுவது வழக்கமானதாக உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளிக்கான வழக்கமான ரயில்கள் முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கும் நிலையில், சிறப்பு ரயில்கள் அக்.15- ஆம் தேதி முதல் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளி முடிந்த பிறகு பயணத்துக்கும் முன்பதிவு: தீபாவளிக்கு பிறகு அக்.21- ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.22- ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு ஆக.27-ஆம் தேதி வரை நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ராமதாஸும் அன்புமணியும் நாடகமாடுகிறார்கள்: காடுவெட்டி குரு மகள்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸும் அன்புமணியும் நாடகமாடுகிறார்கள் என்று காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை குற்றம்சாட்டியிருக்கிறார்.பாமகவில் நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே மோதல் வெடித்து தனித்தனியாக ... மேலும் பார்க்க

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்... மேலும் பார்க்க

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இரவில் டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18), மாற்றமின்றி விற்பனையாகிறது.சென்ற வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த ஆக. 11-இல் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்க... மேலும் பார்க்க

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அ... மேலும் பார்க்க