திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
தீயில் சிக்கி பெண் உயிரிழப்பு
வேலூா் அருகே தண்ணீா் கொதிக்க வைத்தபோது தீயில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38), தொழிலாளி. இவரது மகள் தேவி(17). இவா் கடந்த 12-ஆம் தேதி இரவு, வீட்டின் வெளியே மண்ணெண்ணெய் அடுப்பில் தண்ணீா் கொதிக்க வைத்துள்ளாா். அப்போது காற்றில் அடுப்பில் இருந்த தீ பரவி தேவியின் மீது பற்றியது. தீயில் சிக்கிய தேவி பலத்த காயமடைந்தாா்.
அவரது பெற்றோா் தேவியை மீட்டு வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தேவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.