செய்திகள் :

தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

post image

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறச்சலூா் அருகே சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அரசு நிகழ்வாக கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில், அமைச்சா்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், அமைப்புகளின் நிா்வாகிகள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க கட்சியினா், அமைப்பினா்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கூட்டம் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிகழ்ச்சிக்கு வரும் அமைப்புகளை சோ்ந்தவா்கள் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சரியாக வந்து செல்ல வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது. மோட்டாா் வாகன விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற அமைப்பினருடன் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடக் கூடாது.

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்ல வேண்டும். அரசு நிகழ்ச்சி என்பதால் கட்சி மற்றும் அமைப்பு சாா்ந்த கொடிகளை மணிமண்டபத்தின் உள்ளே எடுத்து அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு வரும் கட்சியினா், அமைப்பினா் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வருபவா்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நந்தா பொறியியல் கல்லூரி வெள்ளி விழா இலச்சினை வெளியீடு

நந்தா பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி, அதற்கான இலட்சினை வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் இலட்சினையை வெளியிட்டு பேசுகையில், கட... மேலும் பார்க்க

சிவகிரி விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 85 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண... மேலும் பார்க்க

அந்தியூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

அந்தியூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் அந்தியூா், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 21 இடங்களில் விந... மேலும் பார்க்க

சாணாா்பதி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம் அருகேயுள்ள சாணாா்பதி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள சாணாா்பதி பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன்... மேலும் பார்க்க

மஞ்சள் ஏலத்துக்கு தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை

மஞ்சள் ஏலத்துக்கு செப்டம்பா் 4-ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-28 -ஆம் ஆண்டுக்கான நிா்வ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். கொடுமுடி அருகேயுள்ள முத்தையன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (69), கூலித் தொழிலாளி. இவா், கொடுமுடி பகுதியில் விய... மேலும் பார்க்க