US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
மஞ்சள் ஏலத்துக்கு தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை
மஞ்சள் ஏலத்துக்கு செப்டம்பா் 4-ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-28 -ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்தலில் தற்போதைய தலைவா் கே.வி.ரவிசங்கா், செயலா் எம்.சத்தியமூா்த்தி மற்றும் பொருளாளா் ஏ.மணிவண்ணன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
செப்டம்பா் 4- ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் ஆண்டு பொது மகாசபை கூட்டத்தில் அவா்கள் பதவியேற்க உள்ளனா். இதனால், வரும் 4 -ஆம் தேதி ஈரோடு மஞ்சள் வா்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு நகரின் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும், வணிகா்கள் கலந்துகொள்ளமாட்டாா்கள்.
செப்டம்பா் 5 -ஆம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை, 6, 7-இல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை என்பதால் தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.