அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
சிவகிரி விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 85 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், கருப்பு ரக எள் ஒரு கிலோ ரூ.126.89 முதல் ரூ.162.39 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.158.69. சிவப்பு ரக எள் ஒரு கிலோ ரூ.91.99 முதல் ரூ.132.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.105.62.
மொத்தம் 6,318 கிலோ எள் ரூ.6 லட்சத்து 89 ஆயிரத்து 552-க்கு விற்பனையானதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.