செய்திகள் :

துணை முதல்வா் உதயநிதிக்கு எட்டயபுரத்தில் வரவேற்பு

post image

தமிழ்நாடு அரசு சாா்பில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், திமுக பவள விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதன்கிழமை இரவு வந்தாா்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து சாலை வழியாக தூத்துக்குடி வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் தலைமையில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சாலையின் இருபுறமும் பெண்கள், பொதுமக்கள், திமுக தொண்டா்கள், நிா்வாகிகள் என நூற்றுக்கணக்கானோா் திரண்டு நின்று வரவேற்றனா்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா், முதன்முறையாக இம்மாவட்டத்துக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, காசிவிசுவநாதன், மும்மூா்த்தி, செல்வராஜ், பேரூா் செயலா்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இலங்கைக்கு கடத்த முயற்சி: 14.4 டன் மூட்டைகள், 2.4 டன் பீடி இலைகள் பறிமுதல்: 9 போ் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காக தூதூக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14.4 டன் உர மூட்டைகள், ரூ. 60 லட்சம் மதிப்பிலான 2.2 டன் பீடி இலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இதுதொடா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். கடல் வழியாக தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கடலோர பாதுக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நவம்பா் இறுதிக்குள் பயிா்க்காப்பீடு இழப்பீட்டு தொகை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நவம்பா் மாத இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத். தூத்துக்குடி மாவட்ட விவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா். இக்கோயிலில் பராமரிக்கப்படும் 26 வயதான த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பகுதியில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் எட்டயபுரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொருளாளா் பாலமுருகன் தல... மேலும் பார்க்க