இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!
துபை டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்..! அதிகபட்ச தொகைதான் காரணமா?
துபை டி20 ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வினை (39 வயது) எந்த அணியும் தேர்வு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஆர்.அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த டிசம்பரில் ஓய்வை அறிவித்தார்.
துபையில் நடைபெறும் ஐஎல்டி20 தொடரில் அடிப்படை விலை 12,000 அமெரிக்க டாலரில் அஸ்வின் ஏலத்தில் பங்கேற்றார்.
ஆறு இலக்க எண்ணில் ஏலத்தில் பங்கேற்ற ஒரே வீரரான இவரை எந்த அணியும் தேர்வு செய்யாமல்விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் வைல்ட் கார்டு வகையில் ஏதேனும் ஒரு அணி ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஏற்கெனவே, அஸ்வின் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமில்லாமல் ஹாங்காங் சிக்ஸஸ் அணிக்காக இந்திய அணியிலும் அஸ்வின் விளையாடுக்கிறார்.
சிஎஸ்கேவில் தொடங்கிய தனது ஐபிஎல் பயணத்தை அதே அணியில் முடித்து வைத்தார். கடைசி சீசனில் சுமாரான செயல்பாடுகளை வழங்கிய அஸ்வினை மினி ஏலத்தில் விற்க இருந்ததாக சில தகவல்கள் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.