பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
துறையூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்பனை
துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1.24 கோடிக்கு பருத்தி விற்பனையானது.
திருச்சி விற்பனைக் குழு செயலா் சி. சொா்ணபாரதி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் துறையூா் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும், பெரம்பலூா், கொங்கனாபுரம், பண்ருட்டி உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த 19 வியாபாரிகள் கலந்து கொண்டனா். பருத்தியின் தரத்தின் அடிப்படையில் ஒரு குவிண்டால் பருத்தி குறைந்தபட்சமாக ரூ. 6210க்கும், அதிக பட்சமாக ரூ. 7529க்கும் ஏலம் கோரப்பட்டது. நிறைவில் 1839.97 குவிண்டால் பருத்தி ரூ. 1,24,76,432க்கு விற்பனையானது.
விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தி. தங்கதுரை, உரிம இட ஆய்வாளா் ஏ. அன்புசெல்வி உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் வேளாண்மை விற்பனைத்துறை அலுவலா்கள் முன்னின்று ஏலத்தை நடத்தினா்.