செய்திகள் :

துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!

post image

துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளாராம்.

நடிகை ஷ்ருதி ஹாசன் 3 திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னணி பாடகியாக பலரிடமும் வரவேற்பைப் பெற்றவருக்கு முதல் படம் சரியான வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை என ஷ்ருதியே தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்படம் இன்றுவரை நல்ல காதல் திரைப்படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த ஷ்ருதி ஹாசன் சலார் படத்திலும் நாயகியாக கவனம் பெற்றார்.

தற்போது, இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஏ. ஆர். முருகதாஸ் சந்தர்ப்பவாதி! விளாசும் சல்மான் கான் ரசிகர்கள்!

actor shruti haasan spokes about her new movie with dulquer salmaan

கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரஹானே !

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்க்யா ரஹானே விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு, சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்கு கிடைத்த ... மேலும் பார்க்க

தமிழுக்கு அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.ஏஜிஎஸ் தயாரிக்கும் 28-வது திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாகவும் நடிகை அபிராமி நாயகியாகவும் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத... மேலும் பார்க்க

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் ... மேலும் பார்க்க

பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தஞ்சாவூர் அருகேயுள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

ஏ. ஆர். முருகதாஸ் சந்தர்ப்பவாதி! விளாசும் சல்மான் கான் ரசிகர்கள்!

நடிகர் சல்மான் கானின் ரசிகர்கள் ஏ. ஆர். முருகதாஸைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடி... மேலும் பார்க்க