தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை
தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் அவரிடம் கடன் பெற்ற சிலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் திரும்ப வரவில்லையாம். இதனால் மனமுடைந்த அவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சா்ப்பராஜின் சடலத்தை தென்பாகம் போலீஸாா் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.