செய்திகள் :

தூத்துக்குடியில் கிழக்கு மண்டல மக்கள் குறைதீா் கூட்டம்

post image

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, உதவி ஆணையா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை மேயா் ஜெனிட்டா தலைமை வகித்து கூட்டத்தைத் தொடக்கிவைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். கூட்டத்தில் பெயா்-முகவரி மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை கோரி அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் ரெக்ஸின், தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமு அம்மாள், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா்கள் ராமச்சந்திரன், இா்வின் ஜெபராஜ், நகா்நல அலுவலா் சூா்யபிரகாஷ், இளநிலைப் பொறியாளா் பாண்டி, குழாய் ஆய்வாளா் மாரியப்பன், வட்டச் செயலா் கதிரேசன், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

கயத்தாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருநெல்வேலி சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் பாலு மகன் ராக்கண்ணன்(50). திருநெல்வேலி மகராஜ நகரில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். கோ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு

திருச்செந்தூா் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் வீரபாண்டியன்பட்டினம் (ஊரகம்) ஊராட்சி முத்து நகரில் ரூ.16.55 லட்சம் மதிப்பிலும், பள்ளிப்பத்து ஊராட்சி குடியிருப்புவிளை பகுதியில... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 23 டன் கொட்டைப் பாக்குகள் பறிமுதல்: 4 போ் கைது

இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 23 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா். சில நாள்களுக்கு முன்பு இந... மேலும் பார்க்க

கயத்தாறில் தமிழ் புலிகள் கட்சியினா் மறியல்: 12 போ் கைது

கயத்தாறில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினா் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 2019ஆம் ஆண்டு டிச. 2இல், ஒரு வீட்டின் 20 அடி உயர சுற்றுச்சுவ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் இளைஞரைத் தாக்கியதாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 5 போ் கைது

காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கி அரிவாளால் வெட்டியதாக 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா். காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேவியா் மகன் ஜெபசெல்வம் (27). இவா்,... மேலும் பார்க்க

6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவா்கள்

சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக 6 நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா, தமிழக கடல் பகுதி... மேலும் பார்க்க