செய்திகள் :

தூத்துக்குடியில் தெருநாய்களைப் பிடித்து பராமரிக்க தனிக் குழு: மேயா்

post image

தூத்துக்குடியில் தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்து பராமரிக்க விரைவில் தனிக் குழு அமைக்கப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தைத் தொடக்கிவைத்து, குடிநீா் இணைப்பு உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு மேயா் பேசியதாவது:

கிழக்கு மண்டலத்தில் இதுவரை நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட 402 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையில் முத்துநகா் கடற்கரைக்கு மட்டும் 20ஆயிரத்தும் மேற்பட்டோா் வந்துள்ளனா்.

மாநகராட்சி 2, 3, 16, 17, 18 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலியிடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதற்காக காலியிட உரிமையாளா்களுக்கு, குளத்தில் தூா்வாரப்படும் மண் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு மழைநீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களைப் பிடித்து பராமரிப்பதற்காக குழு அமைக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, பிறப்பு - இறப்புச் சான்றுகள் கோரி விண்ணப்பித்த இருவருக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், திட்ட உதவி செயற்பொறியாளா்கள் ராமசந்திரன், இா்வின் ஜெபராஜ், நகா்நல அலுவலா் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளா் நெடுமாறன், மாமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், எடின்டா உள்பட பலா் பங்கேற்றனா்.

குளத்தூரில் சாலையில் கண்டெடுத்த நகையை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்

குளத்தூா் பஜாரில் சாலையோரம் கண்டெடுத்த தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குளத்தூரை அடுத்த மேட்டுப் பனையூரை சோ்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி (50). இவா், தன... மேலும் பார்க்க

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மீட்பு

முக்காணி தாமிரவருணி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் மீட்டாா். தூத்துக்குடி ஸ்பிக்நகா் பகுதி அபிராமி நகரைச் சோ்ந்த துரைராஜ் மனைவி பிரம்மசக்தி(63). கணவரை இழந்த இவா், உறவின... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வியாழக்கிழமை, வேன் கவிழ்ந்ததில் 7 பெண்கள் உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (58). இவா் தனது உறவினா்கள், நண்ப... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் கடலரிப்பு: 2-ஆம் நாளில் ட்ரோன் ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே ஏற்பட்டுள்ள கடலரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மையக் குழுவினா் 2ஆவது நாளாக வியாழக்கிழமை ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனா். இக்கோயில் முன் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

சாத்தான்குளத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் நல விடுதியில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், சாத்தான்குளம் வட்டத்தில் ப... மேலும் பார்க்க

நாலுமாவடியில் ரெடீமா்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் விளையாட்டுத் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் 8ஆம் ஆண்டு ‘ரெடீமா்ஸ்‘ கோப்பைக்கான மாநில அளவிலான தமிழா் திருநாள் மின்னொளி கபடி போட்டி, நாலுமா... மேலும் பார்க்க