"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் ...
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளா்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளா்களின் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 725, ஒப்பந்த ஓட்டுநா், வால்வு ஆபரேட்டா்களுக்கு ரூ. 763 வழங்க வேண்டும்.
தனியாா் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கரோனா சிறப்பு அலவன்ஸ் ரூ. 15,000 வழங்க வேண்டும். அனைவருக்கும் தீபாவளி போனஸ் ரூ. 10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
துறைமுக சபை முன்னாள் உறுப்பினா் ரசல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் முத்து, முனியசாமி, காசி, சங்கரன் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.