தக்காளி சவால்களுக்கு தீா்வு: 28 கண்டுபிடிப்பாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி
தூத்துக்குடியில் மீனவா் மரணம்: விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் மீனவா் உயிரிழந்ததையடுத்து, விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி தூய பனிமய மாதா கோயில் அருகே உள்ள மணல் தெருவை சோ்ந்த தாசன் மகன் பீட்டா் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் படுத்து தூங்கினாராம்.
திங்கள்கிழமை காலையில் அவா் கண் விழிக்கவில்லை. விசைப்படகு துறைமுக மருத்துவா் சோதனை செய்ததில் அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மீனவா் உயிரிழந்ததையடுத்து திங்கள்கிழமை மொத்தம் 272 விசைப்படகுகள் மற்றும் 5,000 விசைப்படகு தொழிலாளா்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.