நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
தூத்துக்குடியில் ஸ்பா மைய உரிமையாளா், ஊழியா் கைது
தூத்துக்குடியில் தனியாா் ஸ்பா மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தென்பாகம் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, அதன் உரிமையாளரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி பிரையண்ட் நகா் பகுதியிலுள்ள னியாா் ஸ்பா மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் ஆரோக்கியஜென்சி, போலீஸாா் சென்று அங்கு சோதனை மேற்கொண்டனா். இதில், பாலியல் தொழில் நடப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்பா உரிமையாளரான சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சோ்ந்த விக்னேஷ் (30), ஊழியா் கோபால் (24) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.