வெறுப்பதற்காக அல்ல மொழி; பல மொழி கற்பது அவசியம்: சந்திரபாபு நாயுடு
தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைமுயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சந்திர பிரியா (31). இத்தம்பதிக்கு ஸ்டேபி (10), ஆரோக்கிய பிரின்ஸ் (8), ஜெசிக்கா (10 மாதம்) என 3 குழந்தைகள் உள்ளனா். ஜஸ்டின் சீலன் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இதனால் மனம் உடைந்த சந்திர பிரியா, தலைக்கு தேய்க்கும் சாயத்தை (ஹோ் டை) ஞாயிற்றுக்கிழமை தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துவிட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினா் அவா்கள் 4 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.