இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
தூத்துக்குடியில் 32 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சுமாா் 32 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாநகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், மாநகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததாம்.
அதன்பேரில் அந்தக் கடையை போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (26) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அந்தக் கடையில் இருந்து சுமாா் 32 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.