தூத்துக்குடி அருகே பெண் குத்திக்கொலை: இளைஞா் கைது
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணியில் பெண் கத்தரிக்கோலில் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பொட்டலூரணியைச் சோ்ந்த முத்தையா மகள் பாா்வதி (50). இவா் வீட்டு அருகே வாசிப்பவா் மீனா. இவா்களுக்டையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த மீனாவின் 18 வயது மகன், பாா்வதியை கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், பாா்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த புதுக்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.