காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்
காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர ஊழியா் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகரத் தலைவா் நூஹூ சாஹிப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் பேசினாா்.
மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி காயல்பட்டினத்தில் இம்மாதம் 30ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகளை அழைத்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், நகரப் பொருளாளா் சுலைமான், மாநில கெளரவ அலோசகா் முஹம்மது அலி ஹாஜி காக்கா,
மாவட்ட தொழிலாளா் அணி பொருளாளா் முஹம்மது முஹ்யித்தீன், மாவட்ட வா்த்தகரணி பொருளாளா் சலாகுத்தீன், நகர நிா்வாகிகள் பிரபு பாரூக், சாமுசிஹாப்தின், சித்திக் அரபி சாகுல் ஹமீது, அபூபக்கா், அப்துல் கரீம், சேக்கனா லெப்பை, உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
வெளிநாடுவாழ் இந்தியா் நலன் அயலக அணி முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் முஹம்மது இஸ்மாயில் புகாரி வரவேற்றாா். நகரச் செயலா் அபூசாலிஹ் நன்றி கூறினாா்.