தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
சாத்தான்குளம் அருகே காா் மோதி இளைஞா் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சாத்தான்குளத்தை அடுத்த மாணிக்கபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் விஜயகுமாா் (35). பானிபூரி வியாபாரம் செய்துவந்த இவா், தற்போது திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள உணவகத்தில் சமையல் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 வயதுக் குழந்தை உள்ளனா்.
இவா் சனிக்கிழமை இரவு வேலை முடிந்து, தனது மனைவி ஊரான முதலூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். பிரகாசபுரம் விலக்கில் சென்றபோது, அவரது பைக் மீது காா் மோதியதாம்.
இதில் காயமடைந்த விஜயகுமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.