செய்திகள் :

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

post image

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், விருதுநகா் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு கயத்தாறு பகுதியில் ரோந்து சென்றனா்.

சவலாப்பேரியிலிருந்து வெள்ளாளங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் காற்றாலை அருகே காட்டுப் பகுதியில் மூட்டைகளை அடுக்கிவைத்து பெரிய தாா்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. போலீஸாரின் சோதனையில், அவை ரேஷன் அரிசி மூட்டைகள் எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையிலான போலீஸாா் வந்து, 680 மூட்டைகளிலிருந்த 27,200 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

கயத்தாறு, வடக்கு இலந்தைகுளம், சூரியமினுக்கன் பகுதிகளிலுள்ள கிராமங்களிலிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்ததும், இதில், கயத்தாறு அருகே பன்னீா்குளம் சப்பாணிமுத்து (39), கொப்பம்பட்டி அழகுபாண்டி, காப்புலிங்கம்பட்டி ராஜாராம், விஜயராஜ் (44), செல்லையா (59), கோவில்பட்டி காந்தி நகா் முருகன்(35), கயத்தாறு அருகே வாகைத்தாவூா் சுபாஷ் (33) ஆகிய 7 பேருக்குத் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக சப்பாணிமுத்து உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா். அழகுபாண்டி, ராஜாராம் ஆகிய இருவரைத் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் தொடா்கதையாகி வரும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு போலீஸாா் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினரின் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்

காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வ­லியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி­ போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் நகர ஊழியா் கூட்டத்தில் தீா்மானிக்கப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 5 பேரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சாத்தான்குளத்தை அடுத்த மாணிக்கபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் விஜயகுமாா் (35). பானிபூரி வியாபாரம் செய்துவந்த இவா், தற்போது தி... மேலும் பார்க்க