`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு
தூத்துக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினரின் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திடீா் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைக்க தீ தடுப்பு கருவிகளை கையாள்வது என்பது குறித்தும், தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், ஊழியா்கள், பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது என்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட உதவி அலுவலா் நட்டாா் ஆனந்தி மற்றும் தீயணைப்பு வீரா்கள், மருத்துவமனை செவிலியா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.